search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள போட்டி"

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் - அைமச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று ராணிப்பேட்டை பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது.

    போட்டியை மாவட்ட அளவிலான தடகள போட்டியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 100மீ, 200மீ, 400மீ ஓட்டத்தினை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், நகரமன்ற நகரமன்ற தலைவர்கள் ஹரிணி (வாலாஜா) அமீன் (மேல்விஷாரம்) துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சண்முகம்உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், 10ம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், 10ம் வகுப்பு மாணவி பவித்ர லட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம்பரிசும் பெற்று மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தேசிய அளவிலான தடகள போட்டியில் ப்ரண்ட்லைன்மிலேனியம் பள்ளி மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல்போட்டியில் 1.78மீ தாண்டி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி,இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
    • தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர்.

    கோவை,

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 14-ந் தேதியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

    இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தடகள போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டதது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில்

    கோவை மாவட்ட அத்லட்டிக் தலைவர் ஸ்ரீபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
    • ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே லட்சியம் என்று பயிற்சி யாளர் தெரிவித்தார்.

    திருப்பூர் :

    சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் திருப்பூர் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் அந்த கிளப்பின் பயிற்சியாளர் பிரபு மாரிமுத்துவுக்கு 15க்கும் மேற்பட்ட மாநில மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்கியதற்காக சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று பயிற்சியாளர் பிரபு மாரிமுத்து தெரிவித்தார். 

    • தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    செங்கல்பட்டு:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 4-வது மாநில இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( 18 முதல் 20 வயதுக்குட்பட்டோர்) இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வண்டலூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கியது.

    2 நாட்கள் நடைபெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மார்ச் 10 முதல் 12-ந்தேதி வரை நடைபெறும். 18-வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    • மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
    • காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் வசந்தகுமார் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் இவர் ''போல் வால்ட்'' எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் 2-வது பரிசு பெற்றார். இவரை பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    கிராம எல்லையில் இருந்து மாணவர் வசந்தகுமார் உடற்உகல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி நாடார், தலைவர் லட்சுமண நாடார், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர்-சங்கத் தலைவர் தர்மராஜ் நாடார், உறவின்முறை தலைவர் ராமசாமி நாடார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர்.

    பள்ளியில் நடந்த பாராட்டு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

    • மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    • திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டபள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெ ற்ற தடகளப்போட்டி மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், 17 வயது பெண்கள் பிரிவில் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் தடகளப் போட்டியில் ஈட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், தட்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று ள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாண விகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், உடற்க ல்வி ஆசிரியர் கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொ ண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    • வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    காங்கயம் :

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான தடகள போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கயம் சிவன்மலை ஜேஸீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மாத இறுதியில் திருவண்ணாமலையில் நடைபெறஉள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனை பள்ளி பொருளாளர் பழனிச்சாமி, மோகனசுந்தரம், சாவித்திரிசுப்ரமணியம், முதல்வர் சுப்ரமணி,பள்ளியின் தாளாளர்,அகடமிக் டைரக்டர்ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

    உடுமலை :

    தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

    இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த போட்டியை திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஒலிம்பிக் கொடியேற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.

    இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த 535 மாணவர்களும், 525 மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டிகள் 14, 17, 19 வயதின் அடிப்படையில் நடைபெற்றது. 100 முதல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    • குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
    • பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.

    குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.

    இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்திய தடகள ஒலிம்பிக் வீரர் ஞானதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 120 பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

    மாணவர்கள் அணி வகுப்பு உடன் போட்டிகள் தொடங்கியது. இதில் ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடக்கும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அசத்திய மாணவர்களை படத்தில் காணலாம்.  

    ×